Published August 7, 2021 | Version v1
Book Open

விடியுமா!

Description

முப்பதுகளின்‌ நாவலாசிரியர்கள்‌ இலக்கியத்தில்‌ தங்களிடங்களைஉறுதிப்படுத்திக்‌ கொண்டிருந்த கால கட்டத்தில்‌, 1945-ஆம்‌வருஷத்தில்‌ சதிநாத்‌ பாதுடியின்‌ 'ஜாகரி' பிரசுரமாயிற்று. சதிநாத்‌1906 ஆண்டில்‌ பிறந்து 1965இல்‌ காலமானார்‌. அவரது சிறுகதைகள்‌நாவல்களின்‌ பின்னணிச்‌ சுழல்‌ பிஹார்‌ ராஜ்யத்தின்‌ ஒரு சிறு பகுதி.அவரது நாவல்களில்‌ மற்றுமிரண்டு 'டோரய சரித்மானஸ்‌' முதல்‌பாகம்‌, இரண்டாம்‌ பாகம்‌ (1945-51), அசின்‌ ராகிஸி (1954).செயற்கையற்ற நடை, கையாளும்‌ விஷயங்களில்‌ ஒரு புதுமை,வினாக்கள்‌ எழுப்பும்‌ மனிதாபிமான நோக்கு--இவையே இவருடையநூல்களின்‌ தனிச்சிறப்பு. ஜாகரி தான்‌ இவரது முதல்‌ படைப்பு.பிரசுரமானவுடனேயே வாசகர்களைக்‌ கவர்ந்து விட்டது. இந்நாவல்‌வெளி வருவதற்கும்‌ வெற்றி அடைவதற்குமிடையே தவக்கமில்லாததற்கு இரண்டு காரணங்கள்‌. கனல்‌ கக்கிய 1942 இயக்கத்தைப்‌பற்றிய அர்த்த புஷ்டியுடன்‌ கூடிய முதல்‌ நாவல்‌ இதுதான்‌. இரண்‌டாவது இந்நாவலின்‌ வடிவப்‌ புதுமை. இந்நாவல்‌ வெளிவருவதற்குமூன்றாண்டுகளுக்கு முன்புதான்‌ 42-ஆம்‌ ஆண்டின்‌ மக்களெழுச்‌சி நடைபெற்றிருந்தது. எனவே மக்கள்‌ மனத்தில்‌ நேரில்‌ கண்ட உண்மையின்‌ ஒளி மங்காமல்‌ இருந்தது. பல தேச பக்தர்கள்‌ இருளடைந்தசிலைகளில்‌ வைகறையில்‌ உயிர்களைத்‌ தியாகம்‌ செய்திருந்தனர்‌.அக்கால கட்டத்தின்‌ உண்மை பொலியும்‌ யதார்த்த சித்திரமாகஅமைந்துள்ளது இந்நாவல்‌. பீலு, தந்தை, தாயார்‌, நீலு ஆகியநால்வரும்‌ ஒரு பயங்கர இரவின்‌ முடிவை எதிர்நோக்கி இருக்கின்றனர்‌.இவ்விரவின்‌ இறுதியில்‌ பீலு தூக்கிலிடப்படவிருக்கிறான்‌. இந்நால்வரின்‌நான்கு வகைப்பட்ட ஆத்ம சம்பாஷணைகளின்‌ தொகுப்புத்தான்‌ இந்தநாவல்‌, இந்த உத்தி பற்றிய ஆய்வுக்குப்‌ பின்னர்‌ வருவோம்‌. முதலில்‌இதன்‌ விஷயத்தை எடுத்துக்கொள்வோம்‌.1921-க்கும்‌ 1942-க்கும்‌ இடையே மக்கள்‌ எழுச்சி என்ற பேரலைபாரதத்தைத்‌ தாக்கியது. இதன்‌ விளைவாக, அரசியல்‌, பத்திரிகைகளின்‌,பக்கங்களை நிரப்பும்‌ விஷயமாக மட்டுமல்லாமல்‌ சாதாரண மக்களின்‌வாழ்க்கையின்‌ பகுதியாகவும்‌ ஆயிற்று. 'மாஸ்டர்‌ ஸாஹப்‌'போன்ற தேசியச்‌ குடும்பங்கள்‌ வளர்ந்தன. இத்தகைய கொந்தளிப்புவங்காளத்தில்‌ 1955-ஆம்‌ ஆண்டின்‌ சுதேசி இயக்க சமயத்தில்‌எழுந்திருந்தது. அந்த இயக்கம்‌ வங்காளிகளின்‌ வாழ்க்கையைக்‌ குடும்பமட்டத்திலும்‌, சமூக மட்டத்திலும்‌ பாதித்திருந்தது. எனவே,அரசியல்‌ நாவல்‌ என்று குறிப்பாகச்‌ சொல்லக்கூடிய படைப்புகள்‌இருபதாம்‌ நூற்றாண்டின்‌ இருபதுகளிலிருந்து தவிர்க்க முடியாதஒன்றாயின. 'கரே பாயிரே' (1916) என்ற நவீனத்தின்‌ பின்னணிவங்கப்‌ பிரிவினை காலத்திய அரசியல்‌ உத்வேக வண்ணத்தால்‌ ரவீந்திரநாதரால்‌ தீட்டப்பட்டது. அந்த நவீனமும்‌ பல பாத்திரங்களின்‌ஆத்ம சம்பாஷணைகளின்‌ தொகுப்பாக அமைந்திருந்தது. அரசியல்‌சூழ்நிலையின்‌ பாதிப்பு இருந்ததென்றாலும்‌, ஒரு குடும்பத்தில்‌ நிகழ்ந்தநெருக்கடி தான்‌ இந்நாவலின்‌ முக்கிய விஷயம்‌. வங்காளஇலக்கியத்தில்‌ இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்‌ நாவல்‌--'பதேர்‌தாபி' (1926) சரத்சந்திரர்‌ எழுதியது. வன்முறைத்‌ தீவிரவாதிகளின்‌அக்னிக்‌ குழம்பின்‌ கொந்தளிப்பு ஒரு சராசரிக்‌ (average) கதையின்‌வண்ணக்‌ கவர்ச்சியுள்ள அட்டை (wrapper) யாக அமைந்துள்ளது.இதுதான்‌ இந்நாவலின்‌ எளிய ஜன ரஞ்சகத்துக்குக்‌ காரணம்‌.ரவீந்திரநாதர்‌ மற்றுமோர்‌ அரசியல்‌ நாவல்‌ 1934-இல்‌ எழுதியுள்‌ளார்‌. அதன்‌ பெயர்‌ 'சார்‌ அத்யாய்‌'. 'கரே பாயிரே,' சார்‌ அத்யாய்‌'என்ற இரண்டு நாவல்களிலும்‌, கட்சி போன்ற நிறுவனங்களைத்‌ தனிமனிதனின்‌ சுதந்தரத்தின்‌ எதிரியாக நோக்கியுள்ளார்‌. இரண்டிலும்‌,எப்படிக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌, கட்சி ஆணைகள்‌ மனிதனின்‌ தனித்துவம்‌விரிவடைவதை தடை செய்கின்றன என்று விளக்கியுள்ளார்‌.வாழையடி வாழையாக வளர்ந்துள்ள பாரதக்‌ கலாசாரப்‌ பரம்‌பரையினால்‌ உருவாக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையை மக்களெழுச்சிஇயக்கங்கள்‌ எப்படிப்‌ பாதித்தன என்ற பிரச்னைக்குத்‌ தாரா சங்கர்‌'தர்தி தேவா' (1939) என்ற நாவலில்‌ உருக்‌ கொடுத்திருக்கிறார்‌.தர்தி தேவா ஒரு மாபெரும்‌ ஓவியம்‌. இதில்‌ வன்‌ செயல்‌ தீவிரஇயக்கம்‌ எப்படிக்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாகத்‌ தன்னை மாற்றி அமைத்துக்‌கொண்டது, அவ்வியக்கத்தின்‌ உயிர்நாடி போன்றோர்‌ எப்படிச்‌கொஞ்சங்‌ கொஞ்சமாகத்‌ தனிநபர்‌ வன்முறை வழிகளை ஒதுக்கிகாந்திஜியின்‌ மக்களியக்கத்தில்‌ சேர்ந்தனர்‌ என்பது சித்திரிக்கப்‌பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல, தர்தி தேவதா ஓர்‌ அரசியல்‌குடும்ப நாவல்‌. 'ஜாகரி'யில்‌ ஒரு தேசியக்‌ குடும்பத்தைப்‌ பார்க்‌கிறோம்‌. ஆனால்‌ தர்தி தேவதாவில்‌ ஒரு தேசியக்‌ குடும்பத்தின்‌ பிறப்பின்‌விருத்தாந்தத்தைக்‌ காண்கிறோம்‌. நாவலின்‌ நாயகன்‌ ஸ்ரீநாத்துடன்‌கூடவே அவன்‌ மனைவி கெளரி, அவன்‌ அத்தை, மட்டுமல்லாமல்‌,அவனுடைய மழலை மாறாத குழந்தை எல்லாரும்‌ எப்படி வந்தேமாதரம்‌-மந்திரோபதேசம்‌ பெற்று தீட்சை பெற்றனர்‌ என்பது தான்‌இந்த நாவவின்‌ கடைசிச்‌ சொல்‌. இந்த முடிவுக்கு முன்‌ நிகழ்ந்தமனோதத்துவ மோதல்களிலிருந்து எழுந்த சம்பவக்கோவைகளேதர்தி தேவா. சாதாரண மனோ வேற்றுமைகளில்‌ எழும்‌ குழப்பங்களின்‌காரணமாக நசித்துச்‌ சிதைந்து போய்‌ கொண்டிருக்கும்‌ ஒரு குடும்பம்‌எப்படி, தேசிய இயக்கத்தின்‌ விளைவாகச்‌ சீர்திருந்தி புதியதும்‌ விசாலமானதுமான ஒரு விழிப்புணர்வினால்‌ தீண்டப்பட்டுச்‌ சிலிர்த்தெழுந்ததுஎன்ற உண்மையைத்‌ தாராசங்கரை விட வேறு ஒருவரும்‌ இவ்வளவுஅழகாகச்‌ சித்திரித்‌ ததில்லை.சதிநாத்‌ பாதுரியின்‌ 'ஜாகரி' வங்காள அரசியல்‌ நாவல்‌ இலக்கியத்‌துக்கு ஒரு புதிய பரிமாணம்‌ கொடுத்துள்ளது. 1942-ஆம்‌ ஆண்டிலேயேபாரத அரசியல்‌ விழிப்புணர்வின்‌ ஒருமை சிதறி வேற்றுமைகள்‌தனித்துவம்‌ பெற்று வளர ஆரம்பித்து விட்டன. காங்கிரஸ்‌ இசைத்துவந்த 'கோஷ்டிகான' அமைப்பில்‌, சி.எஸ்‌. பி., அதாவது காங்கிரஸ்‌ஸோஷலிஸ்ட்‌ பார்ட்டி, கம்யூனிஸ்ட்‌ பார்ட்டி ஆகியோர்‌ தங்கள்‌ தனிஸ்வரங்களை மீட்ட ஆரம்பித்துவிட்டனர்‌.ஆகஸ்ட்‌ இயக்கத்தின்‌ உச்சத்தைப்‌ பற்றியே காங்கிரஸுக்கும்‌,கம்யூனிஸ்ட்‌ கட்சிக்கும்‌ கடும்‌ கருத்து மோதல்கள்‌ எழுந்தன. காங்கிரஸுக்கும்‌, ஸி.எஸ்‌.பி.-க்கும்‌ இடையே, இயக்கத்தின்‌ கதிவிதிகளைப்‌பற்றிப்‌ பல கருத்து வேறுபாடுகள்‌ இருந்தன. ஜாகரியில்‌ வர்ணிக்கப்‌படும்‌ 'மாஸ்டர்‌ ஸாஹிப்‌' பின்‌ குடும்பம்‌ அன்றைய அரசியல்‌ உலகில்‌ஒரு நுணுக்க ஓவியமாக (miniature painting) அமைந்திருக்கிறது.பீலு ஒரு காங்கிரஸ்‌ சோஷலிஸ்ட்‌. அவன்‌ பெற்றோர்‌ முதிர்ந்தகாங்கிரஸ்வாதிகள்‌. நீலு ஒரு கம்யூனிஸ்ட்‌. ஆகஸ்ட்‌ இயக்கத்தின்‌மாபெரும்‌ சக்தி இந்தக்‌ குடும்பத்தைத்‌ தாக்கியது, இதற்கும்‌ பெரியபரிமாணத்தில்‌ பாரதம்‌ முழுவதையும்‌ தாக்கியது போலவே. ஜாகரிஆசிரியரின்‌ முதல்‌ நாவல்‌. ஆனால்‌ அரசியல்‌ சூழ்நிலையை மற்றுமிருநாவல்களிலும்‌ பயன்படுத்தியிருக்கிறார்‌. 'சித்ரகுப்தேர்‌ பைல்‌' (1949)மற்றும்‌ 'தனோரை மானஸ்‌' (1947) என்ற நாவலின்‌ இரண்டாம்‌பகுதி. என்‌ கணிப்பில்‌ 'தனோரை' தான்‌ ஆசிரியரின்‌ சிறந்த படைப்பு.இதன்‌ இரண்டாம்‌ பாகத்தில்‌ வெகுண்டெழுந்த 42-ஆம்‌ இயக்கத்தைப்‌பின்னணியாக உபயோகத்திருக்கிறார்‌. இதிலிருந்து இந்த இயக்கத்‌தினால்‌ எவ்வளவு தூரம்‌ இவர்‌ பாதிக்கப்பட்டிருக்கிறார்‌ என்பதுதெளிவாகிறது.ஒரு கால கட்டத்தின்‌ முடிவைப்‌ பறைசாற்றும், மாபெரும்‌ அக்னிக்‌குழம்பின்‌ மேலிருக்கும்‌ மூடிகளை விலக்கி அவ்வொளியின்‌ பிரகாசத்தில்‌மக்களைக்‌ காணும்‌ துடிப்பு இதில்‌ தெரிகிறது. ஒரு அரசியல்‌ நாவல்‌என்ற பாண்டத்தில்‌ மனித குலத்தின்‌ பல வண்ணத்திய உணர்ச்சிகளைவடித்தெடுத்திருக்கிறார்‌. இதுதான்‌ ஜாகரியின்‌ மற்றொரு தனிச்சிறப்பு.அதிலுள்ள அரசியல்‌, பிரச்சார அரசியலல்ல. அதன்‌ உத்தி முறைகளைவிவரித்தால்‌ இது தெளிவாகும்‌. இந்த நாவலின்‌ அமைப்பு முறையில்‌ஆசிரியருக்குக்‌ கிட்டியுள்ள தோற்றமான காலப்‌ பரிமாணம்‌ மாலைக்கும்‌வைகறைக்குமிடையே உள்ள பன்னிரண்டு மணி நேரம்‌. ஆனால்‌ ஆத்மசம்பாஷணை என்ற உத்தியின்‌ விளைவாக இந்தப்‌ பன்னிரண்டு மணிநேரத்தின்‌ மீது வெகு காலத்திய ஞாபகங்களின்‌ சாயை படருகிறது.ஆத்ம சம்பாஷணை என்ற காரணத்தால்‌ நினைவுகளைக்‌ காலவரிசைக்‌கேற்பச்‌ சீர்படுத்தத்‌ தேவையில்லாமல்‌ போய்விட்டது. ஒரு நாளின்‌சம்பவங்களைக்‌ கோபால்‌ ஹல்தாரின்‌ 'ஏகதா' (1939)-வில்‌ படித்துஇருக்கிறோம்‌. அந்த நூலிலும்‌ கதாநாயகனின்‌ நினைவோட்டம்‌ பலஇணைப்புகளால்‌ (associations) பன்னிரண்டு மணி கால அளவை மீறிஇயங்கியுள்ளது. ஆனால்‌ மற்றொரு காரணத்துக்காகவும்‌ ஜாகரியின்‌அமைப்பு தவிர்க்க முடியாது, முன்னரே நிர்ணயிக்கப்பட்டதாகஅமைந்துள்ளது. இங்கு வர்ணிக்கப்பட்டுள்ள முழு இரவும்‌ ஒருநாடகத்தின்‌ கடைசிக்‌ காட்சியாக அமைந்துள்ளது. கடைசித்‌ திரைவிழவிருக்கும்‌ நிலையில்‌, பாத்திரங்களின்‌ உரையாடல்களைவிட அவர்‌களின்‌ நீண்ட ஆத்ம சம்பாஷணைகளைக்‌ கேட்க வேண்டிய அவசியம்‌ஏற்பட்டுள்ளது.பயங்கரமான, தவிர்க்க முடியாத கடைசி விநாடிக்காக கணங்களைஎண்ணிக்கொண்டிருக்கும்‌ நேரத்திலேயே, ஒன்றோடு ஒன்று பின்னிப்‌பிணைத்திருக்கும்‌ நான்கு நபர்களின்‌ உலகங்கள்‌, அல்லது நான்கு உலகநோக்குகள்‌ நம்‌ முன்‌ உருப்பெறுகின்‌றன. ஆசிரியர்‌ கையாளும்‌உத்தியின்‌ காரணமாக நாவலின்‌ உயிர்த்துடிப்புடன்‌ கூடிய முடிவுகடைசி வரை மறைக்கப்படாமலே இருக்கிறது. இந்த உத்தி தவிர்க்கமுடியாமல்‌ இருப்பதற்கு மற்றுமொரு காரணம்‌ உண்டு. இந்நாவல்‌ஏதோ ஓர்‌ அரசியல்‌ உள்நோக்குடன்‌ எழுதப்பட்டதல்ல. நீலுவின்‌குணத்தின்‌ உண்மை சொரூபத்தை விளக்க இந்த உத்தி அவசியமாகிறது. சாதாரண உபயோகத்திலிருக்கும்‌ உத்திகள்‌ மூலமாகநீலுவின்‌ அந்தரங்க ஆத்மாவை இந்த அளவுக்கு வாசகர்களுக்குப்‌புரியவைத்திருக்க முடியாது. ஜாகரியின்‌ மூலப்‌ பொருள்‌ மனிதன்‌--கட்சித்‌ கொண்டன்‌ அல்ல.

Files

cover.jpg

Files (3.2 MB)

Name Size Download all
md5:a0e5bf25bcaf7d491c6db3aa6371730b
303.0 kB Preview Download
md5:ebcb4610f3264d948ce4a4bb2c9a247d
576.7 kB Download
md5:57e96e006e872e13d858f3ae7bcc530b
1.5 MB Preview Download
md5:303540716378b2ab2b2655f10a9a8e3a
882.7 kB Download